Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:31 — ஆன்மா தூய்மையடையும் இடம்

ஆதாமின் சந்ததியினரே, நீங்கள் மஸ்ஜிதிற்குச் செல்லும்போது தூய்மையாகவும், மேலும் நன்றாக உடையணிந்தும் இருக்க வேண்டும். மேலும் அளவோடு உண்ணுங்கள் மற்றும் பருகுங்கள்; கண்டிப்பாக, அவர் பெருந்தீனிக்காரர்களை நேசிப்பதில்லை.

[7:30] சிலரை அவர் வழிநடத்தினார்,அதேசமயம் மற்றவர்கள் வழிதவறும்படி விட்டுவிடப்படு கின்றனர். அவர்கள் கடவுள்-க்கு பதிலாக, சாத்தான்களைத் தங்கள் எஜமானர்களாக எடுத்துக் கொண்டனர், இருப்பினும் தாங்கள் வழிநடத்தப்பட்டதாகவே அவர்கள் நம்புகின்றனர்.

[7:32] “கடவுள் தன் படைப்பினங்களுக்காகப் படைத்திருக்கின்ற நல்ல பொருட்களையும், நல்ல ஆகாரங்களையும் தடைசெய்வது யார்?” என்று கூறுவீராக. “அத்தகைய வாழ்வாதாரங்கள், நம்பிக்கை கொண்டவர்களால் இவ்வுலகில் அனுபவிக்கப்படுவதற்காக உள்ளவை. இன் னும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் அந்த நல்ல வாழ்வாதாரங்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கென்றே உரியவை களாக இருக்கும்” என்று கூறுவீராக. இவ்வாறு நாம் அறிந்து கொள்ளும் மக்களுக்கு வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.