Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:32 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“கடவுள் தன் படைப்பினங்களுக்காகப் படைத்திருக்கின்ற நல்ல பொருட்களையும், நல்ல ஆகாரங்களையும் தடைசெய்வது யார்?” என்று கூறுவீராக. “அத்தகைய வாழ்வாதாரங்கள், நம்பிக்கை கொண்டவர்களால் இவ்வுலகில் அனுபவிக்கப்படுவதற்காக உள்ளவை. இன் னும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் அந்த நல்ல வாழ்வாதாரங்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கென்றே உரியவை களாக இருக்கும்” என்று கூறுவீராக. இவ்வாறு நாம் அறிந்து கொள்ளும் மக்களுக்கு வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.

[7:31] ஆதாமின் சந்ததியினரே, நீங்கள் மஸ்ஜிதிற்குச் செல்லும்போது தூய்மையாகவும், மேலும் நன்றாக உடையணிந்தும் இருக்க வேண்டும். மேலும் அளவோடு உண்ணுங்கள் மற்றும் பருகுங்கள்; கண்டிப்பாக, அவர் பெருந்தீனிக்காரர்களை நேசிப்பதில்லை.

[7:33] “என்னுடைய இரட்சகர், தீயகாரியங்களை, அவை வெளிப்படையானதானாலும் சரி, மறைவானதானாலும் சரி, மேலும் பாவங்களை, மேலும் நியாயப்படுத்த முடியாத வலுச்சண்டை களை, மேலும் கடவுள்-உடன் சக்தியற்ற இணைத்தெய்வங்களை ஏற்படுத்திக்கொள் வதை, மேலும் கடவுள் பற்றி நீங்கள் அறியாத தைக் கூறுவதை, மட்டுமே தடை செய்கின்றார்” என்று கூறுவீராக.