குர்ஆன் 7:33 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“என்னுடைய இரட்சகர், தீயகாரியங்களை, அவை வெளிப்படையானதானாலும் சரி, மறைவானதானாலும் சரி, மேலும் பாவங்களை, மேலும் நியாயப்படுத்த முடியாத வலுச்சண்டை களை, மேலும் கடவுள்-உடன் சக்தியற்ற இணைத்தெய்வங்களை ஏற்படுத்திக்கொள் வதை, மேலும் கடவுள் பற்றி நீங்கள் அறியாத தைக் கூறுவதை, மட்டுமே தடை செய்கின்றார்” என்று கூறுவீராக.
[7:32] “கடவுள் தன் படைப்பினங்களுக்காகப் படைத்திருக்கின்ற நல்ல பொருட்களையும், நல்ல ஆகாரங்களையும் தடைசெய்வது யார்?” என்று கூறுவீராக. “அத்தகைய வாழ்வாதாரங்கள், நம்பிக்கை கொண்டவர்களால் இவ்வுலகில் அனுபவிக்கப்படுவதற்காக உள்ளவை. இன் னும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் அந்த நல்ல வாழ்வாதாரங்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கென்றே உரியவை களாக இருக்கும்” என்று கூறுவீராக. இவ்வாறு நாம் அறிந்து கொள்ளும் மக்களுக்கு வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.
[7:34] ஒவ்வொரு சமூகத்திற்கும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக் காலம் உண்டு. அவர்களுடைய இக்காலத்தவணை முடிவிற்கு வந்துவிட்டால், அவர்கள் அதனை ஒரு மணி நேரமேனும் தாமதப்படுத்தவோ, அல்லது அதனை முற்படுத்தவோ இயலாது.