குர்ஆன் 7:53 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அனைத்து (முன்னறிவிப்புகளும்) நிறைவேற்றப் படும் வரை அவர்கள் காத்திருக்கின்றனரா? அவ்வாறு நிறைவேறும் அந்நாளில் அதற்கு முன் இதனை அலட்சியப்படுத்தியவர்கள் “நம் இரட் சகரின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தனர். எங்கள் சார்பாகப் பரிந்துரை செய் வதற்குப் பரிந்துரைப்போர் எவரேனும் உள்ள னரா? எங்கள் நடத்தையை நாங்கள் மாற்றிக் கொண்டு நாங்கள் செய்து கொண்டிருந்ததை விடச்சிறந்த காரியங்களைச் செய்யும் பொருட்டு எங்களை நீங்கள் திரும்ப அனுப்பு வீர்களா? ” என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் ஆன்மாக்களை இழந்து விட்டனர், மேலும் அவர்களுடைய சொந்தக் கண்டு பிடிப்புக்களே அவர்களுடைய அழிவிற்குக் காரணமாகிவிட்டன.
[7:52] நாம் முற்றிலும் விவரிக்கப்பட்டதும், அறிவும், வழிகாட்டலும் கொண்டதும்,மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு கருணையுமானதொரு வேதத்தை அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம்.
[7:54] உங்கள் இரட்சகர்தான் ஒரே கடவுள்: அவர் வானங்கள் மற்றும் பூமியை ஆறு* நாட்களில் படைத்து, பின்னர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக்கொண்டார். பகலை விடாமல் பின் தொடர்ந்தவாறே இரவு அதனை முந்து கின்றது, மேலும் சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவை அவருடைய கட்டளைக் கேற்பப் பணியாற்றும்படிச் செய்யப் பட்டன. நிச்சயமாக, அவர் அனைத்துப் படைப்பு களையும், மேலும் அனைத்துக் கட்டளை களையும் கட்டுப்படுத்துகின்றார். பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள் மிகவும் உயர்ந்தவராக இருக்கின்றார்.