Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:52 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நாம் முற்றிலும் விவரிக்கப்பட்டதும், அறிவும், வழிகாட்டலும் கொண்டதும்,மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு கருணையுமானதொரு வேதத்தை அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம்.

[7:51] தங்கள் மார்க்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாதவர்கள், மேலும் இந்த உலக வாழ்க்கையோடு முழுமையாக மூழ்கி விட்டவர் கள், இவர்களை நாம் அந்தநாளில், அந்த நாளை மறந்துவிட்ட காரணத்திற்காகவும், மேலும் அவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளை அலட்சியம் செய்த காரணத்திற்காகவும் மறந்து விடுவோம்.

[7:53] அனைத்து (முன்னறிவிப்புகளும்) நிறைவேற்றப் படும் வரை அவர்கள் காத்திருக்கின்றனரா? அவ்வாறு நிறைவேறும் அந்நாளில் அதற்கு முன் இதனை அலட்சியப்படுத்தியவர்கள் “நம் இரட் சகரின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தனர். எங்கள் சார்பாகப் பரிந்துரை செய் வதற்குப் பரிந்துரைப்போர் எவரேனும் உள்ள னரா? எங்கள் நடத்தையை நாங்கள் மாற்றிக் கொண்டு நாங்கள் செய்து கொண்டிருந்ததை விடச்சிறந்த காரியங்களைச் செய்யும் பொருட்டு எங்களை நீங்கள் திரும்ப அனுப்பு வீர்களா? ” என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் ஆன்மாக்களை இழந்து விட்டனர், மேலும் அவர்களுடைய சொந்தக் கண்டு பிடிப்புக்களே அவர்களுடைய அழிவிற்குக் காரணமாகிவிட்டன.