Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:55 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நீங்கள் உங்கள் இரட்சகரை பகிரங்கமாகவும், அந்தரங்கமாகவும் வழிபட வேண்டும்; வரம்பு மீறுபவர்களை அவர் நேசிப்பதில்லை.

[7:54] உங்கள் இரட்சகர்தான் ஒரே கடவுள்: அவர் வானங்கள் மற்றும் பூமியை ஆறு* நாட்களில் படைத்து, பின்னர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக்கொண்டார். பகலை விடாமல் பின் தொடர்ந்தவாறே இரவு அதனை முந்து கின்றது, மேலும் சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவை அவருடைய கட்டளைக் கேற்பப் பணியாற்றும்படிச் செய்யப் பட்டன. நிச்சயமாக, அவர் அனைத்துப் படைப்பு களையும், மேலும் அனைத்துக் கட்டளை களையும் கட்டுப்படுத்துகின்றார். பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள் மிகவும் உயர்ந்தவராக இருக்கின்றார்.

[7:56] பூமி சீர்செய்யப்பட்ட பின்னர் அதனை சீர்குலைக்காதீர்கள், மேலும் பயபக்தியுடனும், மற்றும் நம்பிக்கையுடனும் அவரை வழிபடுங்கள், நிச்சயமாக, கடவுள்-ன் கருணை நன்னெறியாளர் களால் அடையப்படக்கூடியதாக இருக்கின்றது.