குர்ஆன் 7:56 — ஆன்மா தூய்மையடையும் இடம்
பூமி சீர்செய்யப்பட்ட பின்னர் அதனை சீர்குலைக்காதீர்கள், மேலும் பயபக்தியுடனும், மற்றும் நம்பிக்கையுடனும் அவரை வழிபடுங்கள், நிச்சயமாக, கடவுள்-ன் கருணை நன்னெறியாளர் களால் அடையப்படக்கூடியதாக இருக்கின்றது.
[7:55] நீங்கள் உங்கள் இரட்சகரை பகிரங்கமாகவும், அந்தரங்கமாகவும் வழிபட வேண்டும்; வரம்பு மீறுபவர்களை அவர் நேசிப்பதில்லை.
[7:57] அவர்தான் தன் கரங்களில் இருந்து ஓர் அருளாக நற்சகுணத்துடன் காற்றை அனுப்புகின்றவர். அவை கனத்த மேகங்களை ஒன்று சேர்த்தவுடன், நாம் அவற்றை இறந்து போன நிலங்களை நோக்கி செலுத்துகின்றோம், மேலும் தண்ணீரைக் கொண்டு அனைத்துக் கனிவர்க்கங்களையும் விளைவிப்பதற்காக அதிலிருந்து அதனைக் கீழே அனுப்புகின்றோம், . நீங்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, இவ்விதமாக இறந்தவற்றை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றோம்.