குர்ஆன் 7:58 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நல்ல நிலம் தன் இரட்சகரின் அனுமதிப்படி தன் தாவரங்களை விருப்பத்துடன் முளைப்பிக் கின்றது, அதே சமயம் கெட்ட நிலம் பயன்தரக் கூடிய எதையும் மிகக் குறைவாகவே முளைப் பிக்கின்றது. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்விதமாக நாம் வெளிப்பாடுகளை விளக்கு கின்றோம்.
[7:57] அவர்தான் தன் கரங்களில் இருந்து ஓர் அருளாக நற்சகுணத்துடன் காற்றை அனுப்புகின்றவர். அவை கனத்த மேகங்களை ஒன்று சேர்த்தவுடன், நாம் அவற்றை இறந்து போன நிலங்களை நோக்கி செலுத்துகின்றோம், மேலும் தண்ணீரைக் கொண்டு அனைத்துக் கனிவர்க்கங்களையும் விளைவிப்பதற்காக அதிலிருந்து அதனைக் கீழே அனுப்புகின்றோம், . நீங்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, இவ்விதமாக இறந்தவற்றை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றோம்.
[7:59] நாம் நோவாவை அவர் சமூகத்தாரிடம் அனுப்பினோம், அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை, அச்ச மூட்டும் ஒரு நாளின் தண்டனையை உங்களுக் காக நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார்.