Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:69 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“உங்களை எச்சரிப்பதற்காக, உங்களைப் போன்ற ஒரு மனிதர் மூலமாக உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளதா? அவர் நோவாவின் சமூகத்தாருக்குப் பிறகு உங்களை வாரிசுகளாக்கியதையும் உங்களை எண்ணிக்கையில் பெருக்கியதையும் நினைவு கூருங்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு, கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள்.”

[7:68] “என் இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு நேர்மையாக அறிவுரை கூறுகின்றேன்.

[7:70] அவர்கள், “ எங்களைக் கடவுள்-ஐ மட்டும் வழிபடும்படிச் செய்யவும், மேலும் எங்கள் பெற்றோர்கள் வழிபட்டவற்றைக் கைவிடும்படிச் செய்யவும்தான் நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எங்களை அச்சுறுத்தும் அந்த அழிவைக் கொண்டு வரும்படி நாங்கள் உம்மிடம் சவால் விடுகின் றோம்” என்று கூறினார்கள்.