குர்ஆன் 7:70 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்கள், “ எங்களைக் கடவுள்-ஐ மட்டும் வழிபடும்படிச் செய்யவும், மேலும் எங்கள் பெற்றோர்கள் வழிபட்டவற்றைக் கைவிடும்படிச் செய்யவும்தான் நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எங்களை அச்சுறுத்தும் அந்த அழிவைக் கொண்டு வரும்படி நாங்கள் உம்மிடம் சவால் விடுகின் றோம்” என்று கூறினார்கள்.
[7:69] “உங்களை எச்சரிப்பதற்காக, உங்களைப் போன்ற ஒரு மனிதர் மூலமாக உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளதா? அவர் நோவாவின் சமூகத்தாருக்குப் பிறகு உங்களை வாரிசுகளாக்கியதையும் உங்களை எண்ணிக்கையில் பெருக்கியதையும் நினைவு கூருங்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு, கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள்.”
[7:71] அவர், “நீங்கள் உங்கள் இரட்சகரின் தண்டனைக்கும், கடுங்கோபத்திற்கும் உள் ளாகிவிட்டீர்கள். கடவுள்-ஆல் ஒரு போதும் அங்கீகரிக்கப்படாத-நீங்களும் உங்கள் பெற்றோர்களும்-இட்டுக் கட்டிய கண்டு பிடிப்புகளுக்குஆதரவாக நீங்கள் என்னிடம் வாதாடுகின்றீர்களா? ஆகையால், காத்திருங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து காத்திருக்கின்றேன்” என்று கூறினார்.