Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:71 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர், “நீங்கள் உங்கள் இரட்சகரின் தண்டனைக்கும், கடுங்கோபத்திற்கும் உள் ளாகிவிட்டீர்கள். கடவுள்-ஆல் ஒரு போதும் அங்கீகரிக்கப்படாத-நீங்களும் உங்கள் பெற்றோர்களும்-இட்டுக் கட்டிய கண்டு பிடிப்புகளுக்குஆதரவாக நீங்கள் என்னிடம் வாதாடுகின்றீர்களா? ஆகையால், காத்திருங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து காத்திருக்கின்றேன்” என்று கூறினார்.

[7:70] அவர்கள், “ எங்களைக் கடவுள்-ஐ மட்டும் வழிபடும்படிச் செய்யவும், மேலும் எங்கள் பெற்றோர்கள் வழிபட்டவற்றைக் கைவிடும்படிச் செய்யவும்தான் நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எங்களை அச்சுறுத்தும் அந்த அழிவைக் கொண்டு வரும்படி நாங்கள் உம்மிடம் சவால் விடுகின் றோம்” என்று கூறினார்கள்.

[7:72] பின்னர் நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளால் காத்துக் கொண்டோம், மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை புறக்கணித்து நம்பிக்கை யாளர்களாக இருக்க மறுத்தவர்களை அழித்தோம்.