Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:72 — ஆன்மா தூய்மையடையும் இடம்

பின்னர் நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளால் காத்துக் கொண்டோம், மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை புறக்கணித்து நம்பிக்கை யாளர்களாக இருக்க மறுத்தவர்களை அழித்தோம்.

[7:71] அவர், “நீங்கள் உங்கள் இரட்சகரின் தண்டனைக்கும், கடுங்கோபத்திற்கும் உள் ளாகிவிட்டீர்கள். கடவுள்-ஆல் ஒரு போதும் அங்கீகரிக்கப்படாத-நீங்களும் உங்கள் பெற்றோர்களும்-இட்டுக் கட்டிய கண்டு பிடிப்புகளுக்குஆதரவாக நீங்கள் என்னிடம் வாதாடுகின்றீர்களா? ஆகையால், காத்திருங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து காத்திருக்கின்றேன்” என்று கூறினார்.

[7:73] தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது: உங்களுக்கு ஓர் அடையாளமாகப் பணியாற்றுவதற்காக, இதோ கடவுள்-ன் ஒட்டகம். கடவுள்-ன் நிலத்திலிருந்து அது உண்ணட்டும், மேலும் ஒரு வலி மிகுந்த தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விடாமல் இருக்கும் பொருட்டு, எந்த தீங்கையும் கொண்டு நீங்கள் அதனைத் தீண்டாதீர்கள்.