குர்ஆன் 7:73 — ஆன்மா தூய்மையடையும் இடம்
தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது: உங்களுக்கு ஓர் அடையாளமாகப் பணியாற்றுவதற்காக, இதோ கடவுள்-ன் ஒட்டகம். கடவுள்-ன் நிலத்திலிருந்து அது உண்ணட்டும், மேலும் ஒரு வலி மிகுந்த தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விடாமல் இருக்கும் பொருட்டு, எந்த தீங்கையும் கொண்டு நீங்கள் அதனைத் தீண்டாதீர்கள்.
[7:72] பின்னர் நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளால் காத்துக் கொண்டோம், மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை புறக்கணித்து நம்பிக்கை யாளர்களாக இருக்க மறுத்தவர்களை அழித்தோம்.
[7:74] “அவர் ஆதுகளுக்குப் பின்னர் உங்களை வாரிசுகளாக்கியதையும், பள்ளத்தாக்குகளில் மாளிகைகள் கட்டியும், மேலும் அதன் மலை களில் வீடுகளைக் குடைந்தும் உங்களைப் பூமியில் நிலைப்படுத்தியதையும் நினைவு கூருங்கள். கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் சீர்கெடுப்பவர்களாக பூமியில் சுற்றித்திரியா தீர்கள்.”