Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:74 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“அவர் ஆதுகளுக்குப் பின்னர் உங்களை வாரிசுகளாக்கியதையும், பள்ளத்தாக்குகளில் மாளிகைகள் கட்டியும், மேலும் அதன் மலை களில் வீடுகளைக் குடைந்தும் உங்களைப் பூமியில் நிலைப்படுத்தியதையும் நினைவு கூருங்கள். கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் சீர்கெடுப்பவர்களாக பூமியில் சுற்றித்திரியா தீர்கள்.”

[7:73] தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது: உங்களுக்கு ஓர் அடையாளமாகப் பணியாற்றுவதற்காக, இதோ கடவுள்-ன் ஒட்டகம். கடவுள்-ன் நிலத்திலிருந்து அது உண்ணட்டும், மேலும் ஒரு வலி மிகுந்த தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விடாமல் இருக்கும் பொருட்டு, எந்த தீங்கையும் கொண்டு நீங்கள் அதனைத் தீண்டாதீர்கள்.

[7:75] நம்பிக்கைக் கொண்ட பொதுமக்களிடம், அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் கொண்ட தலைவர்கள், “ஸாலிஹ் அவருடைய இரட்சகரால் அனுப்பப்பட்டவர்தான் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?” என்று கூறினர். அவர்கள், “அவர் எங்களுக்குக் கொண்டு வந்த செய்திதான் எங்களை நம்பிக்கையாளர்களாக ஆக்கியது” என்று கூறினார்கள்.