Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:75 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நம்பிக்கைக் கொண்ட பொதுமக்களிடம், அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் கொண்ட தலைவர்கள், “ஸாலிஹ் அவருடைய இரட்சகரால் அனுப்பப்பட்டவர்தான் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?” என்று கூறினர். அவர்கள், “அவர் எங்களுக்குக் கொண்டு வந்த செய்திதான் எங்களை நம்பிக்கையாளர்களாக ஆக்கியது” என்று கூறினார்கள்.

[7:74] “அவர் ஆதுகளுக்குப் பின்னர் உங்களை வாரிசுகளாக்கியதையும், பள்ளத்தாக்குகளில் மாளிகைகள் கட்டியும், மேலும் அதன் மலை களில் வீடுகளைக் குடைந்தும் உங்களைப் பூமியில் நிலைப்படுத்தியதையும் நினைவு கூருங்கள். கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் சீர்கெடுப்பவர்களாக பூமியில் சுற்றித்திரியா தீர்கள்.”

[7:76] ஆணவம் கொண்டவர்கள், “எதன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அதனை நாங்கள் நம்ப மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.