குர்ஆன் 78:37 — அந்த நிகழ்வு
வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர். மிக்க அருளாளர். அவருடைய தீர்மானங்களை எவரொருவரும் ரத்துச் செய்து விட இயலாது.
[78:36] உம்முடைய இரட்சகரிடமிருந்தொரு வெகுமதி; தாராளமானதொரு பிரதிபலன்.
[78:38] பரிசுத்த ஆவியும் மற்றும் வானவர்களும் ஒரு வரிசையில் நிற்கின்ற அந்நாள் வரும். மிக்க அருளாளரால் அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர எவரொருவரும் பேசமாட்டார்கள், மேலும் அவர்கள் சரியானதை மட்டுமே பேசுவார்கள்.