குர்ஆன் 8:12 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
உம் இரட்சகர் வானவர்களுக்கு: “நான் உங்களுடன் இருக்கின்றேன்; ஆகவே நம்பிக்கையாளர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்களில் திகிலை நான் எறிவேன். நீங்கள் அவர்களின் கழுத்துக்களின் மேல் தாக்குவீர்களாக, மேலும் ஒவ்வொரு விரலையும் கூடத் தாக்குவீர்களாக” என்று உள்ளுணர்வளித்ததை நினைவு கூர் வீராக.
[8:11] அமைதி மிக்க தூக்கம் உங்களை ஆட்கொள்ளச் செய்ததன் மூலம் உங்களை அவர் அமை திப்படுத்தினார், மேலும் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்தினார். சாத்தானின் சாபத்தி லிருந்து அவர் உங்களைக் காப்பாற்றி, உங்கள் இதயங்களை மீண்டும் உறுதி செய்து உங்கள் நிலைகளை பலப்படுத்தினார்.
[8:13] கடவுள்-உடனும் அவருடைய தூதருடனும் சண்டையிட்டதால், நியாயமாக அவர்கள் உள்ளானது இதற்குத்தான். ஏனெனில் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் எதிராக சண்டையிடுபவர்களுக்கு கடவுள்-ன் தண்டனை கடுமையானதாகும்.