Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:11 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

அமைதி மிக்க தூக்கம் உங்களை ஆட்கொள்ளச் செய்ததன் மூலம் உங்களை அவர் அமை திப்படுத்தினார், மேலும் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்தினார். சாத்தானின் சாபத்தி லிருந்து அவர் உங்களைக் காப்பாற்றி, உங்கள் இதயங்களை மீண்டும் உறுதி செய்து உங்கள் நிலைகளை பலப்படுத்தினார்.

[8:10] இந்நற்செய்தியை உங்கள் இதயங்களை வலுப் படுத்துவதற்காக கடவுள் வழங்கினார். வெற்றி கடவுள் இடமிருந்து மட்டுமே வருகின் றது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[8:12] உம் இரட்சகர் வானவர்களுக்கு: “நான் உங்களுடன் இருக்கின்றேன்; ஆகவே நம்பிக்கையாளர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்களில் திகிலை நான் எறிவேன். நீங்கள் அவர்களின் கழுத்துக்களின் மேல் தாக்குவீர்களாக, மேலும் ஒவ்வொரு விரலையும் கூடத் தாக்குவீர்களாக” என்று உள்ளுணர்வளித்ததை நினைவு கூர் வீராக.