குர்ஆன் 8:10 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
இந்நற்செய்தியை உங்கள் இதயங்களை வலுப் படுத்துவதற்காக கடவுள் வழங்கினார். வெற்றி கடவுள் இடமிருந்து மட்டுமே வருகின் றது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[8:9] இவ்வாறாக, உங்களுடைய இரட்சகரிடம் காப் பாற்ற வருமாறு நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்த போது, அவர் உங்களுக்கு: “தொடர்ச்சியாக வரும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் ஆதரவளிக்கின்றேன்” என்று பதிலளித்தார்.
[8:11] அமைதி மிக்க தூக்கம் உங்களை ஆட்கொள்ளச் செய்ததன் மூலம் உங்களை அவர் அமை திப்படுத்தினார், மேலும் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்தினார். சாத்தானின் சாபத்தி லிருந்து அவர் உங்களைக் காப்பாற்றி, உங்கள் இதயங்களை மீண்டும் உறுதி செய்து உங்கள் நிலைகளை பலப்படுத்தினார்.