குர்ஆன் 8:2 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென் றால், கடவுள் என்று கூறப்படும் போது அவர் களுடைய இதயங்கள் நடுங்கிவிடும், மேலும் அவருடைய வெளிப்பாடுகள் அவர்களிடத்தில் ஓதிக்காட்டப்படும் போது, அவர்களுடைய விசுவாசம் வலுப்படும், மேலும் தங்கள் இரட்சகர் மீது அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வார்கள்.
[8:1] போரில் கைப்பற்றிய பொருட்கள் குறித்து அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றார்கள் “போரில் கைப்பற்றிய பொருட்கள் கடவுள்-க் கும் மேலும் தூதருக்கும் உரியதாகும்,” என்று கூறுவீராக. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவும், நன்னெறியாளர்களாக இருக்கும்படி ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்ளவும் வேண்டும், மேலும் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-க்கும் அவருடைய தூதருக் கும் கீழ்ப்படிய வேண்டும்.
[8:3] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய வாழ்வாதாரங்களிலிருந்துஅவர்கள் தானம் வழங்குவார்கள்.