குர்ஆன் 8:24 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் -க்கும், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன்* பால் தூதர் அழைக்கும் போது அவருக்கும் பதிலளிக்க வேண்டும். கடவுள் உங்கள் இதயங்களை விடவும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கின்றார் என்பதையும், அவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
[8:23] அவர்களிடத்தில் ஏதேனும் நல்லதை கடவுள் அறிந்திருப்பாரானால், அவர்களை அவர் செவி யேற்பவர்களாக ஆக்கியிருப்பார். அவர்களை அவர் செவியேற்பவர்களாக ஆக்கியிருந் தாலும் கூட, அவர்கள் அப்பொழுதும் வெறுப்புக் கொண்டு திரும்பியிருப்பார்கள்.
[8:25] உங்களில்* உள்ள தீயவர்களுக்கு மட்டும்தான் என்று வரையறுக்கப்படாமல் இருக்கக் கூடிய தண்டனை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். கடவுள்-ன் தண்டனை கடுமையானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.