Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:41 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

போரில் கைப்பற்றிய பொருட்கள் ஏதேனும் உங்களுக்கு இலாபமாகக் கிடைத்தால் உறவி னர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைக ளுக்கும், பயணத்தில் உள்ள அந்நியர்க்கும், கொடுக்கப்படுவதற்காக ஐந்தில் ஒரு பாகம் கடவுள்-க்கும் மேலும் தூதருக்கும் சென்றிட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடவுள் மீதும் மேலும் இருபடையினர் மோதிக்கொண்ட தினமான, தீர்மானத்தின் நாளின் போது நம்முடைய அடியாருக்கு நாம் வெளிப்படுத்தியதன் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருப்பின் இதனை நீங்கள் செய்துவிடுவீர்கள். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[8:40] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் கடவுள் தான் உங்களுடைய இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; சிறந்த இரட்சகரும், எஜமானரும், சிறந்த ஆதரவாளருமாவார்.

[8:42] பள்ளத்தாக்கின் இந்தப் புறத்தில் நீங்கள் இருந்த அதே சமயம், மற்றொரு புறத்தில் அவர்கள் இருந்ததை நினைவு கூர்வீராக, அப்போது அவர்களுடைய வாகனக் கூட்டம் தாழ்வான தரைப்பகுதியை நோக்கி நகர வேண்டியிருந்தது. இந்த வழியில் நீங்கள் அதனைத் திட்டமிட்டிருந் தீர்களானால், உங்களால் அதனைச் செய்திருக்க முடியாது. ஆனால் அழிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டவர்கள், ஒரு வெளிப்படையான காரணத்திற்காக அழிக்கப்படுவதற்கும், காப் பாற்றப்பட வேண்டும் என விதிக்கப்பட்டவர்கள், ஒரு வெளிப்படையான காரணத்திற்காக காப் பாற்றப்படுவதற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயத்தைக் கடவுள் நிகழ்த்த இருந்தார். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.