Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:40 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் கடவுள் தான் உங்களுடைய இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; சிறந்த இரட்சகரும், எஜமானரும், சிறந்த ஆதரவாளருமாவார்.

[8:39] அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதற்கும், மேலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்த உங்களுடைய மார்க்கத்தை செயல்படுத்து வதற்கும் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும். வலுச்சண்டை செய்வதிலிருந்து அவர்கள் விலகியிருந்தால், பின்னர் அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.

[8:41] போரில் கைப்பற்றிய பொருட்கள் ஏதேனும் உங்களுக்கு இலாபமாகக் கிடைத்தால் உறவி னர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைக ளுக்கும், பயணத்தில் உள்ள அந்நியர்க்கும், கொடுக்கப்படுவதற்காக ஐந்தில் ஒரு பாகம் கடவுள்-க்கும் மேலும் தூதருக்கும் சென்றிட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடவுள் மீதும் மேலும் இருபடையினர் மோதிக்கொண்ட தினமான, தீர்மானத்தின் நாளின் போது நம்முடைய அடியாருக்கு நாம் வெளிப்படுத்தியதன் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருப்பின் இதனை நீங்கள் செய்துவிடுவீர்கள். கடவுள் சர்வ சக்தியுடையவர்.