குர்ஆன் 8:59 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நம்ப மறுப்பவர்கள் அப்படியே சென்று தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொள்ள வேண் டாம், அவர்கள் ஒருபோதும் தப்பிக்க இயலாது,
[8:58] மக்களின் ஒரு கூட்டத்தாரால் நீர் வஞ்சிக்கப் படும் போது, அதே விதத்தில் நீர் அவர்களுக் கெதிராக ஒன்று திரள வேண்டும். துரோக மிழைப்பவர்களை கடவுள் விரும்புவதில்லை.
[8:60] அவர்களுக்கெதிராக உங்களால் சேர்க்க முடிந்த பலம் அனைத்தையும் மேலும் உங்களால் ஒன்றுதிரட்ட முடிந்த போர்த்தளவாடங்களையும் நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும், அதைக் கொண்டு கடவுள்-ன் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும், இன்னும் நீங்கள் அறியாத மற்றவர்களையும் நீங்கள் பயமுறுத்த இயலும். கடவுள் அவர்களை அறிகின்றார். கடவுள்-ன் பாதையில் நீங்கள் செலவழிக்கும் எதுவாயினும், சிறிதும் அநீதியின்றி தாராளமாக உங்களிடம் திருப்பித் தரப்படும்.