குர்ஆன் 8:60 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
அவர்களுக்கெதிராக உங்களால் சேர்க்க முடிந்த பலம் அனைத்தையும் மேலும் உங்களால் ஒன்றுதிரட்ட முடிந்த போர்த்தளவாடங்களையும் நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும், அதைக் கொண்டு கடவுள்-ன் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும், இன்னும் நீங்கள் அறியாத மற்றவர்களையும் நீங்கள் பயமுறுத்த இயலும். கடவுள் அவர்களை அறிகின்றார். கடவுள்-ன் பாதையில் நீங்கள் செலவழிக்கும் எதுவாயினும், சிறிதும் அநீதியின்றி தாராளமாக உங்களிடம் திருப்பித் தரப்படும்.
[8:59] நம்ப மறுப்பவர்கள் அப்படியே சென்று தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொள்ள வேண் டாம், அவர்கள் ஒருபோதும் தப்பிக்க இயலாது,
[8:61] அவர்கள் சமாதானத்தின்பால் தஞ்சம்புகுந்தால் நீங்களும் அவ்வாறே செய்திட வேண்டும், மேலும் கடவுள்-இடம் உங்களுடைய பொறுப்பை வைக்க வேண்டும். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.