Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:61 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

அவர்கள் சமாதானத்தின்பால் தஞ்சம்புகுந்தால் நீங்களும் அவ்வாறே செய்திட வேண்டும், மேலும் கடவுள்-இடம் உங்களுடைய பொறுப்பை வைக்க வேண்டும். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[8:60] அவர்களுக்கெதிராக உங்களால் சேர்க்க முடிந்த பலம் அனைத்தையும் மேலும் உங்களால் ஒன்றுதிரட்ட முடிந்த போர்த்தளவாடங்களையும் நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும், அதைக் கொண்டு கடவுள்-ன் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும், இன்னும் நீங்கள் அறியாத மற்றவர்களையும் நீங்கள் பயமுறுத்த இயலும். கடவுள் அவர்களை அறிகின்றார். கடவுள்-ன் பாதையில் நீங்கள் செலவழிக்கும் எதுவாயினும், சிறிதும் அநீதியின்றி தாராளமாக உங்களிடம் திருப்பித் தரப்படும்.

[8:62] அவர்கள் உம்மை ஏமாற்றக் கருதினால், அப்போது கடவுள் உமக்குப் போதுமானவராக இருப்பார். அவர் தனது ஆதரவைக் கொண் டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உமக்கு உதவி புரிவார்.