Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:73 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

நம்ப மறுத்தவர்கள் ஒருவருக்கொருவர் கூட்டாளிகள் ஆவார்கள். இந்த கட்டளைகளை நீங்கள் கடைபிடிக்கவில்லையானால், பூமியில் குழப்பமும், பயங்கரமான சீர்கேடும் ஏற்பட்டு விடும்.

[8:72] நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் ஊர் துறந்து, மேலும் கடவுள்-க்காக தங்களுடைய செல்வத்தையும் மற்றும் தங்களு டைய வாழ்வுகளையும் கொண்டு பாடுபட்டார் களோ அவர்களும், அதே சமயம் அவர்களை உபசரித்து மேலும் அவர்களுக்கு புகலிடம் தந்து, மேலும் அவர்களுக்கு ஆதரவும் தந்தார்களே அவர்களும் தான் ஒருவர் மற்றவருக்கு கூட்டாளிகளாக இருக்கின்றனர். நம்பிக்கை கொண்டிருந்து, ஆனால் உங்களுடன் ஊர் துறந்து வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஊர் துறக்காதவரை, அவர்களுக்கு ஆதரவு எதையும் அளிக்கும் கடமை உங்களுக்கு இல்லை. ஆயினும், மார்க்கச் சகோதரர்கள் என்ற முறையில், உங்களது உதவி அவர்களுக்கு தேவைப் பட்டால், நீங்கள் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சமூகத்திற்கு எதிராகத் தவிர அவர்களுக்கு நீங்கள் உதவி செய்திட வேண்டும். நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.

[8:74] நம்பிக்கை கொண்டு மேலும் ஊர் துறந்து, மேலும் கடவுள்-க்காக பாடுபட்டவர்கள், அது போல் அவர்களை உபசரித்து மேலும் அவர் களுக்கு புகலிடம் தந்து, மேலும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள், இவர்கள் தான் உண்மை யான நம்பிக்கையாளர்கள். அவர்கள் மன்னிப் பிற்கும் மேலும் தாராளமானதொரு வெகுமதிக்கும் தகுதியடைந்து விட்டார்கள்.