குர்ஆன் 8:72 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் ஊர் துறந்து, மேலும் கடவுள்-க்காக தங்களுடைய செல்வத்தையும் மற்றும் தங்களு டைய வாழ்வுகளையும் கொண்டு பாடுபட்டார் களோ அவர்களும், அதே சமயம் அவர்களை உபசரித்து மேலும் அவர்களுக்கு புகலிடம் தந்து, மேலும் அவர்களுக்கு ஆதரவும் தந்தார்களே அவர்களும் தான் ஒருவர் மற்றவருக்கு கூட்டாளிகளாக இருக்கின்றனர். நம்பிக்கை கொண்டிருந்து, ஆனால் உங்களுடன் ஊர் துறந்து வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஊர் துறக்காதவரை, அவர்களுக்கு ஆதரவு எதையும் அளிக்கும் கடமை உங்களுக்கு இல்லை. ஆயினும், மார்க்கச் சகோதரர்கள் என்ற முறையில், உங்களது உதவி அவர்களுக்கு தேவைப் பட்டால், நீங்கள் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சமூகத்திற்கு எதிராகத் தவிர அவர்களுக்கு நீங்கள் உதவி செய்திட வேண்டும். நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.
[8:71] மேலும் அவர்கள் உம்மை வஞ்சிக்க நாடினால், அவர்கள் ஏற்கனவே கடவுள்-ஐ வஞ்சித் திருக்கின்றார்கள். இதனால்தான் அவர்களை நஷ்டவாளிகளாக அவர் ஆக்கினார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[8:73] நம்ப மறுத்தவர்கள் ஒருவருக்கொருவர் கூட்டாளிகள் ஆவார்கள். இந்த கட்டளைகளை நீங்கள் கடைபிடிக்கவில்லையானால், பூமியில் குழப்பமும், பயங்கரமான சீர்கேடும் ஏற்பட்டு விடும்.