Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:71 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

وَإِن يُريدوا خِيانَتَكَ فَقَد خانُوا اللَّهَ مِن قَبلُ فَأَمكَنَ مِنهُم ۗ وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

மேலும் அவர்கள் உம்மை வஞ்சிக்க நாடினால், அவர்கள் ஏற்கனவே கடவுள்-ஐ வஞ்சித் திருக்கின்றார்கள். இதனால்தான் அவர்களை நஷ்டவாளிகளாக அவர் ஆக்கினார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[8:70] வேதம் வழங்கப்பட்டவரே, உம்கைவசம் உள்ள போர்க்கைதிகளிடம், “ உங்கள் இதயங்களில் நல்லது எதையும், கடவுள் அறிந்திருந்தால் நீங்கள் இழந்து விட்ட எதையும் விட சிறந்ததை அவர் உங்களுக்குக் கொடுத்திருப்பார், மேலும் உங்களை மன்னித்துமிருப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று சொல்வீராக.

[8:72] நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் ஊர் துறந்து, மேலும் கடவுள்-க்காக தங்களுடைய செல்வத்தையும் மற்றும் தங்களு டைய வாழ்வுகளையும் கொண்டு பாடுபட்டார் களோ அவர்களும், அதே சமயம் அவர்களை உபசரித்து மேலும் அவர்களுக்கு புகலிடம் தந்து, மேலும் அவர்களுக்கு ஆதரவும் தந்தார்களே அவர்களும் தான் ஒருவர் மற்றவருக்கு கூட்டாளிகளாக இருக்கின்றனர். நம்பிக்கை கொண்டிருந்து, ஆனால் உங்களுடன் ஊர் துறந்து வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஊர் துறக்காதவரை, அவர்களுக்கு ஆதரவு எதையும் அளிக்கும் கடமை உங்களுக்கு இல்லை. ஆயினும், மார்க்கச் சகோதரர்கள் என்ற முறையில், உங்களது உதவி அவர்களுக்கு தேவைப் பட்டால், நீங்கள் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சமூகத்திற்கு எதிராகத் தவிர அவர்களுக்கு நீங்கள் உதவி செய்திட வேண்டும். நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.