Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:8 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

ஏனெனில் தீமை புரிபவர்கள் வெறுத்த போதிலும், சத்தியம் வெல்ல வேண்டும் என்றும், பொய்மை மறைய வேண்டும் என்றும் அவர் விதித்திருந்தார்.

[8:7] ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் மீது உங்களுக்கு வெற்றியைக் கடவுள் வாக்களித்திருந்ததை நினைவு கூருங்கள், ஆனால் நீங்கள் அப் போதும் பலஹீனமான கூட்டத்தையே எதிர் கொள்ள விரும்பினீர்கள். கடவுள்-ன் திட்ட மோ, சத்தியத்தை தன் வார்த்தைகளால் நிலை நாட்டி, நம்ப மறுப்பவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக இருந்தது.

[8:9] இவ்வாறாக, உங்களுடைய இரட்சகரிடம் காப் பாற்ற வருமாறு நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்த போது, அவர் உங்களுக்கு: “தொடர்ச்சியாக வரும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் ஆதரவளிக்கின்றேன்” என்று பதிலளித்தார்.