Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:7 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

وَإِذ يَعِدُكُمُ اللَّهُ إِحدَى الطّائِفَتَينِ أَنَّها لَكُم وَتَوَدّونَ أَنَّ غَيرَ ذاتِ الشَّوكَةِ تَكونُ لَكُم وَيُريدُ اللَّهُ أَن يُحِقَّ الحَقَّ بِكَلِمٰتِهِ وَيَقطَعَ دابِرَ الكٰفِرينَ

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் மீது உங்களுக்கு வெற்றியைக் கடவுள் வாக்களித்திருந்ததை நினைவு கூருங்கள், ஆனால் நீங்கள் அப் போதும் பலஹீனமான கூட்டத்தையே எதிர் கொள்ள விரும்பினீர்கள். கடவுள்-ன் திட்ட மோ, சத்தியத்தை தன் வார்த்தைகளால் நிலை நாட்டி, நம்ப மறுப்பவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக இருந்தது.

[8:6] அவர்களிடம் அனைத்தும் விளக்கப்பட்டுவிட்ட பின்னரும் சத்தியத்திற்கெதிராக அவர்கள் உம்மிடம் வாதாடினார்கள். நிச்சயமான மரணத்தின்பால் அவர்கள் செலுத்தப்படுவது போன்று அவர்கள் நடந்து கொண்டார்கள்.

[8:8] ஏனெனில் தீமை புரிபவர்கள் வெறுத்த போதிலும், சத்தியம் வெல்ல வேண்டும் என்றும், பொய்மை மறைய வேண்டும் என்றும் அவர் விதித்திருந்தார்.