Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:10 — இறுதியான எச்சரிக்கை

அவர்கள் எந்த நம்பிக்கையாளரிடத்திலும், உறவுமுறைகளின் எந்த உரிமையையும், ஒருபோதும் கவனத்தில் கொள்வதில்லை, மேலும் அவர்களுடைய எந்த உடன்படிக்கையையும் அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதில்லை; இவர்கள் தான் மெய்யான வரம்பு மீறியவர்கள் ஆவர்.

[9:9] அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஓர் அற்ப விலைக்கு வணிகம் செய்து விட்டனர். அதன் விளைவாக, அவர்கள் மக்களை, அவருடைய பாதையில் இருந்து துரத்தி விட்டனர். அவர்கள் செய்தது உண்மையில் துக்ககரமானதாகும்!

[9:11] அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வந்தால், அப்போது அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவர். அறிந்து கொள்ளும் மக்களுக்கு இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விளக்குகின்றோம்.