குர்ஆன் 9:11 — இறுதியான எச்சரிக்கை
அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வந்தால், அப்போது அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவர். அறிந்து கொள்ளும் மக்களுக்கு இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விளக்குகின்றோம்.
[9:10] அவர்கள் எந்த நம்பிக்கையாளரிடத்திலும், உறவுமுறைகளின் எந்த உரிமையையும், ஒருபோதும் கவனத்தில் கொள்வதில்லை, மேலும் அவர்களுடைய எந்த உடன்படிக்கையையும் அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதில்லை; இவர்கள் தான் மெய்யான வரம்பு மீறியவர்கள் ஆவர்.
[9:12] அவர்கள் தங்களுடைய உடன்படிக்கைகளைக் காப்பதாக வாக்குறுதி செய்துவிட்டுப் பின்னர் தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை மீறினால், மேலும் உங்களுடைய மார்க்கத்தை தாக்கினால் நம்பிக்கையற்றவர்களின் தலைவர்களுடன் நீங்கள் போரிடலாம்-அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு-அவர்களுடனான உங்களுடைய உடன்படிக்கைக்கு அதற்கு மேலும் நீங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை.