Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:12 — இறுதியான எச்சரிக்கை

அவர்கள் தங்களுடைய உடன்படிக்கைகளைக் காப்பதாக வாக்குறுதி செய்துவிட்டுப் பின்னர் தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை மீறினால், மேலும் உங்களுடைய மார்க்கத்தை தாக்கினால் நம்பிக்கையற்றவர்களின் தலைவர்களுடன் நீங்கள் போரிடலாம்-அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு-அவர்களுடனான உங்களுடைய உடன்படிக்கைக்கு அதற்கு மேலும் நீங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை.

[9:11] அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வந்தால், அப்போது அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவர். அறிந்து கொள்ளும் மக்களுக்கு இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விளக்குகின்றோம்.

[9:13] தங்கள் உடன்படிக்கைகளை மீறியவர்கள், தூதரை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றவர்கள் மேலும், அவர்கள் தான் போரை முதன்முதலில் துவக்கியவர்கள் என்றபோதும் இம்மக்களுடன் நீங்கள் சண்டையிட மாட்டீர்களா? அவர்களுக்கு நீங்கள் பயப்படுகின்றீர்களா? நீங்கள் நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் அஞ்ச வேண்டிய ஒருவர் கடவுள் தான்.