Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:13 — இறுதியான எச்சரிக்கை

தங்கள் உடன்படிக்கைகளை மீறியவர்கள், தூதரை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றவர்கள் மேலும், அவர்கள் தான் போரை முதன்முதலில் துவக்கியவர்கள் என்றபோதும் இம்மக்களுடன் நீங்கள் சண்டையிட மாட்டீர்களா? அவர்களுக்கு நீங்கள் பயப்படுகின்றீர்களா? நீங்கள் நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் அஞ்ச வேண்டிய ஒருவர் கடவுள் தான்.

[9:12] அவர்கள் தங்களுடைய உடன்படிக்கைகளைக் காப்பதாக வாக்குறுதி செய்துவிட்டுப் பின்னர் தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை மீறினால், மேலும் உங்களுடைய மார்க்கத்தை தாக்கினால் நம்பிக்கையற்றவர்களின் தலைவர்களுடன் நீங்கள் போரிடலாம்-அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு-அவர்களுடனான உங்களுடைய உடன்படிக்கைக்கு அதற்கு மேலும் நீங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை.

[9:14] நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், ஏனெனில் கடவுள் உங்கள் கரங்களால் அவர் களைத் தண்டிப்பார், அவர்களை இழிவுபடுத்து வார், அவர்கள் மேல் உங்களுக்கு வெற்றியை வழங்குவார், மேலும் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்களைக் குளிரவைப்பார்.