Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:113 — இறுதியான எச்சரிக்கை

வேதம் வழங்கப்பட்டவரோ, அன்றி நம்பிக்கை கொண்டவர்களோ இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கக் கூடாது, அவர்கள் நரகத்திற்கென விதிக்கப் பட்டவர்கள் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்ட பின்னர், அவர்கள் மிகவும் நெருங்கிய உறவினர்களானாலும் சரியே.

[9:112] அவர்கள் வருந்தித்திருந்துபவர்கள், வழிபாடு செய்பவர்கள், புகழ்பவர்கள், தியானம் செய் பவர்கள், குனிபவர்கள் மற்றும் சிரம் பணிபவர்கள், நன்னெறியை ஆதரிப்பவர்கள், மேலும் தீமையைத் தடுப்பவர்கள், மேலும் கடவுள்-ன் சட்டங்களைப் பாதுகாப்பவர்கள். இத்தகைய நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுவீ ராக.

[9:114] ஆப்ரஹாம் தன் தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியதற்கான ஒரே காரணம், அவர் அவ்விதம் செய்வதாக அவரிடம் வாக்குறுதி செய்திருந்தது மட்டுமே. ஆனால் அவர் கடவுள்-ன் ஒரு விரோதி என்பதை அவர் அடையாளம் கண்டு கொண்டவுடன், அவர் அவரைக் கைவிட்டு விட்டார். ஆப்ரஹாம் அசாதாரணமான கனி வுடையவராகவும், இரக்கம் மிக்கவராகவும் இருந்தார்.