குர்ஆன் 9:114 — இறுதியான எச்சரிக்கை
ஆப்ரஹாம் தன் தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியதற்கான ஒரே காரணம், அவர் அவ்விதம் செய்வதாக அவரிடம் வாக்குறுதி செய்திருந்தது மட்டுமே. ஆனால் அவர் கடவுள்-ன் ஒரு விரோதி என்பதை அவர் அடையாளம் கண்டு கொண்டவுடன், அவர் அவரைக் கைவிட்டு விட்டார். ஆப்ரஹாம் அசாதாரணமான கனி வுடையவராகவும், இரக்கம் மிக்கவராகவும் இருந்தார்.
[9:113] வேதம் வழங்கப்பட்டவரோ, அன்றி நம்பிக்கை கொண்டவர்களோ இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கக் கூடாது, அவர்கள் நரகத்திற்கென விதிக்கப் பட்டவர்கள் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்ட பின்னர், அவர்கள் மிகவும் நெருங்கிய உறவினர்களானாலும் சரியே.
[9:115] எந்த மக்களையும் கடவுள் வழிநடத்திவிட்ட பின்னர் அவர்கள் எதனை எதிர்பார்க்க வேண்டும் என்பதை முதலில் சுட்டிக்காட்டாமல் அவர்களை வழிகேட்டில் அனுப்புவதில்லை. கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.