Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:119 — இறுதியான எச்சரிக்கை

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும், மேலும் உண்மையாளர்களுடன் இருக்க வேண்டும்.

[9:118] பின்தங்கிய மூவரும் கூட (மீட்டுக் கொள்ளப் பட்டனர்). அவர்கள் தங்களைப் பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் கிட்டத்தட்ட கைவிட்டு விடும் அளவிற்கு, விசாலமான இந்தப் பூமி அவர்களுக்கு மிகவும் நெருக்கடியானதாகி விட்டது. இறுதியில், கடவுள்-இடம் சென்றாலன்றி,அவரிடமிருந்து தப்பிப்பதற்கில்லை என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர். அவர்கள் வருந்தித் திருந்தும் பொருட்டு, அவர் பின்னர் அவர்களை மீட்டுக் கொண்டார். கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர்.

[9:120] நகரவாசிகளோ, அன்றி அவர்களைச் சூழ்ந்து இருக்கும் அரேபியர்களோ, கடவுள்-ன் தூதரிட மிருந்து, (அவர் போருக்காக புறப்படும் போது) பின்தங்கிக் கொள்வதை தேடக் கூடாது. அன்றி யும் அவருக்கு ஆதரவளிப்பதை விடத் தங்களு டைய சொந்த விவகாரங்களுக்கு அவர்கள் முன்னுரிமை தரக் கூடாது. இது ஏனெனில், அவர்கள் கடவுள்-க்காக எந்த அளவிலாவது தாகத்தையோ அல்லது கடினமான உழைப்பையோ, அல்லது பசியையோ அனுபவிப்பார்களேயானால், அல்லது நம்பமறுப்பவர்களுக்கு கோபமூட்டும் ஓர் அடியை எடுத்து வைத்தாலோ அல்லது எதிரியின் மீது ஏதேனும் கஷ்டத்தை ஏற்படுத்தினாலோ அது அவர்களுக்குரிய ஒரு வரவாக பதியப்படாமல் இருப்பதில்லை. நன்னெறியான செயல்கள் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிக்க கடவுள் ஒரு போதும் தவறுவதில்லை.