குர்ஆன் 9:120 — இறுதியான எச்சரிக்கை
நகரவாசிகளோ, அன்றி அவர்களைச் சூழ்ந்து இருக்கும் அரேபியர்களோ, கடவுள்-ன் தூதரிட மிருந்து, (அவர் போருக்காக புறப்படும் போது) பின்தங்கிக் கொள்வதை தேடக் கூடாது. அன்றி யும் அவருக்கு ஆதரவளிப்பதை விடத் தங்களு டைய சொந்த விவகாரங்களுக்கு அவர்கள் முன்னுரிமை தரக் கூடாது. இது ஏனெனில், அவர்கள் கடவுள்-க்காக எந்த அளவிலாவது தாகத்தையோ அல்லது கடினமான உழைப்பையோ, அல்லது பசியையோ அனுபவிப்பார்களேயானால், அல்லது நம்பமறுப்பவர்களுக்கு கோபமூட்டும் ஓர் அடியை எடுத்து வைத்தாலோ அல்லது எதிரியின் மீது ஏதேனும் கஷ்டத்தை ஏற்படுத்தினாலோ அது அவர்களுக்குரிய ஒரு வரவாக பதியப்படாமல் இருப்பதில்லை. நன்னெறியான செயல்கள் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிக்க கடவுள் ஒரு போதும் தவறுவதில்லை.
[9:119] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும், மேலும் உண்மையாளர்களுடன் இருக்க வேண்டும்.
[9:121] அன்றியும் அவர்கள் எந்த அளவில் செலவு களுக்குள்ளானாலும், சிறியதோ அல்லது பெரிய தோ, அன்றி அவர்கள் எந்தப் பள்ளத் தாக்கைக் கடந்தாலும், அவர்களுக்குரிய வரவாக பதியப் படாமல் இருப்பதில்லை. கடவுள் நிச்சயமாக அவர்களுடைய செயல்களுக்காக அவர்களுக்கு தாராளமாக வெகுமதியளிப்பார்.