Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:122 — இறுதியான எச்சரிக்கை

நம்பிக்கையாளர்கள் தயாராகிப் புறப்படும் போது, அவர்கள் எல்லோரும் அவ்வாறு செய்துவிட வேண்டாம். ஒவ்வொரு பிரிவி லிருந்தும் சிலர், தங்கள் நேரத்தை அர்ப்பணித் துக் கொண்டு மார்க்கத்தைக் கற்றுக் கொள் வதற்காக ஒன்று திரண்டு புறப்பட வேண்டும். இவ்விதமாக, அவர்கள் திரும்பி வரும்போது தங்கள் சமூகத்தாரிடம், அவர்கள் மார்க்கத் தை தெரிந்து கொண்டவர்களாக தொடர்ந்து இருந்து, அறிவைப்பரப்ப இயலும்.

[9:121] அன்றியும் அவர்கள் எந்த அளவில் செலவு களுக்குள்ளானாலும், சிறியதோ அல்லது பெரிய தோ, அன்றி அவர்கள் எந்தப் பள்ளத் தாக்கைக் கடந்தாலும், அவர்களுக்குரிய வரவாக பதியப் படாமல் இருப்பதில்லை. கடவுள் நிச்சயமாக அவர்களுடைய செயல்களுக்காக அவர்களுக்கு தாராளமாக வெகுமதியளிப்பார்.

[9:123] நம்பிக்கை கொண்டோரே, உங்களைத் தாக்கும் நம்ப மறுப்பவர்களிடம் நீங்கள் சண்டையிட வேண்டும்-அவர்கள் உங்களிடம் கடுமையைக் காணட்டும்-மேலும் கடவுள் நன்னெறியாளர் களுடன் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.