குர்ஆன் 9:123 — இறுதியான எச்சரிக்கை
நம்பிக்கை கொண்டோரே, உங்களைத் தாக்கும் நம்ப மறுப்பவர்களிடம் நீங்கள் சண்டையிட வேண்டும்-அவர்கள் உங்களிடம் கடுமையைக் காணட்டும்-மேலும் கடவுள் நன்னெறியாளர் களுடன் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
[9:122] நம்பிக்கையாளர்கள் தயாராகிப் புறப்படும் போது, அவர்கள் எல்லோரும் அவ்வாறு செய்துவிட வேண்டாம். ஒவ்வொரு பிரிவி லிருந்தும் சிலர், தங்கள் நேரத்தை அர்ப்பணித் துக் கொண்டு மார்க்கத்தைக் கற்றுக் கொள் வதற்காக ஒன்று திரண்டு புறப்பட வேண்டும். இவ்விதமாக, அவர்கள் திரும்பி வரும்போது தங்கள் சமூகத்தாரிடம், அவர்கள் மார்க்கத் தை தெரிந்து கொண்டவர்களாக தொடர்ந்து இருந்து, அறிவைப்பரப்ப இயலும்.
[9:124] ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்டபோது, அவர் களில் சிலர், “இந்த சூரா உங்களில் எவரேனும் ஒருவருடைய விசுவாசத்தைப் பலப்படுத் தியதா?” என்று கூறுவார்கள். உண்மையில், அது நம்பிக்கை கொண்டோரின் விசுவாசத்தைப் பலப்படுத்தவே செய்தது, மேலும் அவர்கள் எந்த ஒரு வெளிப்பாட்டிலும் மகிழ்ச்சியே அடைகின்றனர்.