குர்ஆன் 9:124 — இறுதியான எச்சரிக்கை
ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்டபோது, அவர் களில் சிலர், “இந்த சூரா உங்களில் எவரேனும் ஒருவருடைய விசுவாசத்தைப் பலப்படுத் தியதா?” என்று கூறுவார்கள். உண்மையில், அது நம்பிக்கை கொண்டோரின் விசுவாசத்தைப் பலப்படுத்தவே செய்தது, மேலும் அவர்கள் எந்த ஒரு வெளிப்பாட்டிலும் மகிழ்ச்சியே அடைகின்றனர்.
[9:123] நம்பிக்கை கொண்டோரே, உங்களைத் தாக்கும் நம்ப மறுப்பவர்களிடம் நீங்கள் சண்டையிட வேண்டும்-அவர்கள் உங்களிடம் கடுமையைக் காணட்டும்-மேலும் கடவுள் நன்னெறியாளர் களுடன் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
[9:125] தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி இருப்போரைப் பொறுத்தவரை, அது உண்மை யில் அவர்களுடைய அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே கூட்டியது, மேலும் அவர்கள் நம்ப மறுப்பவர்களாக மரணித்தார்கள்.