Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:2 — இறுதியான எச்சரிக்கை

ஆகையால், நான்கு மாதங்களுக்குப் பூமியில் சுதந்திரமாகச் சுற்றுங்கள், மேலும் கடவுள்-இடமிருந்து நீங்கள் தப்பித்து விட முடியாது என்பதையும், நம்ப மறுப்பவர்களைக் கடவுள் இழிவுபடுத்துகின்றார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

[9:1] உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளும் இணைத் தெய்வ வழிபாடு செய் வோருக்கு, கடவுள் மற்றும் அவருடைய தூதரிடமிருந்து, இதில் ஓர் இறுதியான எச்சரிக்கை வெளியிடப்படுகின்றது.

[9:3] கடவுள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர் களைக் கைவிட்டு விட்டார், மேலும் அவருடைய தூதரும் அவ்வாறே செய்தார், என்று புனித யாத்திரையின் மகத்தான நாளில் கடவுள் இடமிருந்தும் அவருடைய தூதரிடமிருந்தும் மக்கள் அனைவருக்கும் ஒரு பிரகடனம் இதிலே வெளியிடப்படுகின்றது. இனி நீங்கள் வருந்தித் திருந்தினால், அது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் திரும்பி விட்டால், பின்னர் கடவுள்-இடமிருந்து நீங்கள் தப்பித்து விட முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்ப மறுப்போருக்கு வலிமிகுந்ததொரு தண்டனையை வாக்களிப் பீராக.