குர்ஆன் 9:22 — இறுதியான எச்சரிக்கை
அதிலே அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். ஒரு மகத்தான வெகுமதியைக் கடவுள் தன் வசம் வைத்திருக்கின்றார்.
[9:21] அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு நற்செய்தியளிக்கின்றார்: அவரிடமிருந்து கருணையும் மற்றும் அங்கீகாரமும், மேலும் தோட்டங்களும், அங்கே அவர்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் பேரானந்தத்தில் மகிழ்ந் திருப்பார்கள்.
[9:23] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொள்வதைவிட நம்ப மறுத்தலுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்தால், உங்களுடைய பெற்றோர்களானாலும் மேலும் உங்களுடைய உடன் பிறப்புகளானாலும் கூட, நீங்கள் அவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் எவர்கள் தங்களை அவர்களுடன் இணைத்துக் கொள்கின்றார்களோ அவர்கள் வரம்பு மீறுகின்றார்கள்.