Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:24 — இறுதியான எச்சரிக்கை

பிரகடனம் செய்வீராக : “உங்களுடைய பெற்றோர் களும், உங்களுடைய குழந்தைகளும், உங்களு டைய உடன்பிறப்புக்களும், உங்களுடைய வாழ்க் கைத் துணைகளும், உங்களுடைய குடும்பமும், நீங்கள் சம்பாதித்து வைத்துள்ள செல்வமும், உங்களைக் கவலை கொள்ளச் செய்யும் ஒரு வியாபாரமும், மேலும் உங்கள் பிரியத்திற்குரிய இல்லங்களும், கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும்** அவருடைய பாதையில் பாடுபடுவதையும் விட உங்கள் நேசத்திற்குரிய தாயிருந்தால், பிறகு கடவுள் தனது தீர்ப்பைக் கொண்டு வரும் வரை சற்றுக்காத்திருங்கள்.” தீய மக்களைக் கடவுள் நேர்வழியில் செலுத்துவ தில்லை.

[9:23] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொள்வதைவிட நம்ப மறுத்தலுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்தால், உங்களுடைய பெற்றோர்களானாலும் மேலும் உங்களுடைய உடன் பிறப்புகளானாலும் கூட, நீங்கள் அவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் எவர்கள் தங்களை அவர்களுடன் இணைத்துக் கொள்கின்றார்களோ அவர்கள் வரம்பு மீறுகின்றார்கள்.

[9:25] பல சூழ்நிலைகளில் கடவுள் உங்களுக்கு வெற்றியை வழங்கியிருக்கின்றார். ஆயினும் “ஹுனைன்” அன்று, உங்களுடைய பெரும் எண்ணிக்கையால் நீங்கள் மிகவும் பெருமை கொண்டு விட்டீர்கள். அதன் விளைவாக, அது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவவில்லை, மேலும் பரந்த பூமியானது உங்களைச் சுற்றிலும் மிகவும் குறுகியதாக ஆகிவிட்டது, அதனால் நீங்கள் பின்னால் திரும்பி ஓடினீர்கள்.