குர்ஆன் 9:25 — இறுதியான எச்சரிக்கை
பல சூழ்நிலைகளில் கடவுள் உங்களுக்கு வெற்றியை வழங்கியிருக்கின்றார். ஆயினும் “ஹுனைன்” அன்று, உங்களுடைய பெரும் எண்ணிக்கையால் நீங்கள் மிகவும் பெருமை கொண்டு விட்டீர்கள். அதன் விளைவாக, அது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவவில்லை, மேலும் பரந்த பூமியானது உங்களைச் சுற்றிலும் மிகவும் குறுகியதாக ஆகிவிட்டது, அதனால் நீங்கள் பின்னால் திரும்பி ஓடினீர்கள்.
[9:24] பிரகடனம் செய்வீராக : “உங்களுடைய பெற்றோர் களும், உங்களுடைய குழந்தைகளும், உங்களு டைய உடன்பிறப்புக்களும், உங்களுடைய வாழ்க் கைத் துணைகளும், உங்களுடைய குடும்பமும், நீங்கள் சம்பாதித்து வைத்துள்ள செல்வமும், உங்களைக் கவலை கொள்ளச் செய்யும் ஒரு வியாபாரமும், மேலும் உங்கள் பிரியத்திற்குரிய இல்லங்களும், கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும்** அவருடைய பாதையில் பாடுபடுவதையும் விட உங்கள் நேசத்திற்குரிய தாயிருந்தால், பிறகு கடவுள் தனது தீர்ப்பைக் கொண்டு வரும் வரை சற்றுக்காத்திருங்கள்.” தீய மக்களைக் கடவுள் நேர்வழியில் செலுத்துவ தில்லை.
[9:26] அதன்பின்னர் கடவுள் தன்னுடைய தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் மன அமைதி யை இறக்கி வைத்தார். மேலும் அவர், கண்ணுக்குத் தெரியாத படையினரையும், அனுப்பி வைத்தார். இவ்வாறு அவர் நம்ப மறுத்தவர்களைத் தண்டித்தார். இதுவே நம்ப மறுப்பவர்களுக்கான பிரதிபலனாகும்.