குர்ஆன் 9:26 — இறுதியான எச்சரிக்கை
அதன்பின்னர் கடவுள் தன்னுடைய தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் மன அமைதி யை இறக்கி வைத்தார். மேலும் அவர், கண்ணுக்குத் தெரியாத படையினரையும், அனுப்பி வைத்தார். இவ்வாறு அவர் நம்ப மறுத்தவர்களைத் தண்டித்தார். இதுவே நம்ப மறுப்பவர்களுக்கான பிரதிபலனாகும்.
[9:25] பல சூழ்நிலைகளில் கடவுள் உங்களுக்கு வெற்றியை வழங்கியிருக்கின்றார். ஆயினும் “ஹுனைன்” அன்று, உங்களுடைய பெரும் எண்ணிக்கையால் நீங்கள் மிகவும் பெருமை கொண்டு விட்டீர்கள். அதன் விளைவாக, அது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவவில்லை, மேலும் பரந்த பூமியானது உங்களைச் சுற்றிலும் மிகவும் குறுகியதாக ஆகிவிட்டது, அதனால் நீங்கள் பின்னால் திரும்பி ஓடினீர்கள்.
[9:27] இறுதியாக, தான் நாடுவோரைக் கடவுள் மீட்கின்றார், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.