குர்ஆன் 9:32 — இறுதியான எச்சரிக்கை
அவர்கள் தங்களுடைய வாய்களைக்கொண்டு கடவுள்-ன் ஒளியினை ஊதியணைத்துவிட விரும்புகின்றார்கள், ஆனால் நம்ப மறுப்பவர் கள் வெறுத்தபோதிலும், கடவுள் தனது ஒளி முழுமைப்படுத்தப்படுவதை வலியுறுத்து கின்றார்.
[9:31] கடவுள்-க்கு பதிலாக, அவர்கள் தங்களுடைய சமயத் தலைவர்களையும், அறிஞர்களையும் இரட்சகர்களாக* அமைத்துக் கொண்டனர். மற்றவர்கள் மேரியின் மகனாகிய மெசையாஹ் விற்குத் தெய்வீகத் தன்மை கொடுத்தனர். அவர்கள் யாவரும் ஒரே தெய்வத்தை மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும் என்றே கட்டளை யிடப்பட்டிருந்தனர். அவரையன்றி வேறு தெய்வம் இல்லை. அவர் துதிப்பிற்குரியவர், பங்குதாரர்கள் எவரையும் கொள்வதை விட்டும் உயர்வானவர்.
[9:33] அவர்தான் தன்னுடைய தூதரை* வழிகாட்டலைக் கொண்டும், மேலும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தவர், மேலும் இணைத் தெய்வவழிபாடு செய்பவர்கள் வெறுத்த போதிலும், அதனை அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கும்படி செய்வார்.