Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:50 — இறுதியான எச்சரிக்கை

உங்களுக்கு ஏதேனும் நல்லது நிகழ்ந்தால், அவர்கள் துன்புறுகின்றனர், மேலும் உங்களுக்கு ஒரு துன்பம் நேருமானால், குதூகலத்துடன் திரும்பிச் சென்றவர்களாக “நாங்கள் தான் உங்களிடம் இவ்வாறு கூறினோமே” என்று கூறுகின்றார்கள்.

[9:49] அவர்களில் சிலர், “ (பின்தங்கிக் கொள்ள) எனக்கு அனுமதிதாருங்கள்; இத்தகையதொரு கஷ்டத்தை என்மேல் சுமத்தாதீர்கள்” என்று கூறுவார்கள் உண்மையில் இவ்விதமாக, அவர்கள் ஒரு பயங்கரமான கஷ்டத்திற்கு உள்ளாகி விட்டார்கள்; நரகம் நம்ப மறுப்பவர்களைச் சூழ்ந்துள்ளது.

[9:51] கடவுள் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறெதுவும் எங்களுக்கு நேராது. அவரே எங்கள் இரட்சகரும், எஜமானரும் ஆவார். நம்பிக்கையாளர்கள் கடவுள்-ஐ உறுதியாக நம்ப வேண்டும்” என்று கூறுவீராக.