குர்ஆன் 9:55 — இறுதியான எச்சரிக்கை
அவர்களுடைய செல்வத்தாலோ அல்லது அவர்களுடைய குழந்தைகளாலோ கவரப்பட்டு விடாதீர்கள். கடவுள் இவைகளை அவர்களுக் கான தண்டனைக்கு மூல காரணங்களாக ஆக்குகின்றார், மேலும் (அவர்கள் மரணிக்கும் போது) அவர்கள் நம்ப மறுத்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களது ஆன்மாக்கள் பிரிந்து செல்கின்றன.
[9:54] அவர்கள் செலவு செய்வதை ஏற்றுக்கொள்வதி லிருந்து தடுத்தது எதுவென்றால், அவர்கள் கடவுள்-ஐயும் மேலும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்ததும், மேலும் அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்)* கடைப்பிடிக்கும் போது, அவற்றை அவர்கள் சோம்பலுடன் கடைப் பிடித்ததும், மேலும் அவர்கள் தானம் வழங்கிய போது, மனமின்றி அவர்கள் அதைச் செய்ததுமேயாகும்.
[9:56] அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களாக இல்லாத அதே சமயம், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தான் என்று அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர்; அவர்கள் பிளவுண்டாக்கும் கூட்டத்தினர் ஆவர்.